உருளைக்கிழங்குக்கு விசேட வரி !!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியிடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளையும் உள்ளூர் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கை தடை செய்வதற்கு பதிலாக அதற்கு வரி விதிக்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்புமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், இலங்கையில் விதை உருளைக்கிழங்கு உற்பத்தி வருடாந்தம் ஒன்பது மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொரலந்த பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கர் விதை உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அப்பகுதியில் அதிகளவான காணிகளைக் கண்டறிந்து விதை உருளைக்கிழங்கு செய்கையை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவிக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.