அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்!!
6 முதல் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் 2024 முதல் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
8ஆம் தரத்தில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) அறிமுகப்படுத்துவதற்கான ஃபேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
க.பொ.த. உயர்தரத்தில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்துடன் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கல்வி சீர்திருத்தங்களின் அடிப்படையான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கொள்கையை அறிமுகம் செய்வதற்கு இரண்டு வாரங்களில் அமைச்சரவையின் அனுமதி பெறப்படும் என்று அமைச்சர் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களின் எதிர்காலம் தொழில்நுட்ப மேம்பாட்டில் தங்கியிருப்பதால், உயர்கல்வியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பத் துறையில் இலங்கையின் அதே மட்டத்தில் உள்ள நாடுகள் 10 வருடங்கள் முன்னோக்கிச் செல்வதாகத் தெரிவித்த அமைச்சர், எனவே அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அர்த்தமுள்ள கல்வி சீர்திருத்தங்களை எட்டுவது முக்கியம் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.