இந்திய மருத்துவரை கட்டியணைத்து முத்தமிட்ட துருக்கி பெண்!!
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. ‘ஆபரேசன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மீட்புப் படை வீரர்கள், மருத்துவ குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேசம் ஆக்ராவில் செயல்படும் ராணுவ மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் துருக்கி சென்றுள்ள னர். இந்திய ராணுவ மருத்துவ குழு, துருக்கியின் ஹதே நகரில் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை அமைத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
86 மருத்துவ ஊழியர்கள் சேவை
அங்கு இந்திய ராணுவ மருத்துவரான கர்னல் யதுவீர் சிங் தலைமையில் 14 மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 86 மருத்துவ ஊழியர்கள் சேவையாற்றி வருகின்றனர். ஹதே நகர மருத்து வமனையில் பணியாற்றும் இந்திய ராணுவ மருத்துவர் மேஜர் வீணா திவாரி தன்னுடைய தன்னலமற்ற சேவையால் துருக்கி மக்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இரவு, பகல் பாராமல் முதியோர், சிறாருக்கு அவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதைப் பார்த்து நெகிழ்ந்த துருக்கி பெண் ஒருவர், மேஜர் வீணா திவாரியின் கன்னத்தில் முத்தமிட்டு தனது நன்றிக் கடனை, அன்பை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படத்தை இந்திய ராணுவம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
துருக்கியின் காஜியன்டப் நகரில்இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்களை அவர்கள் மீட்டு உள்ளனர். அங்கு 3 நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த 6 வயது சிறுமி நஸ்ரினை இந்திய வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேஜர் வீணா திவாரி தலைமையிலான குழுவினர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். அந்த சிறுமி தற்போது நலமுடன் உள்ளார். சிறுமிநஸ்ரினுடன் மேஜர் வீணா திவாரிஇருக்கும் புகைப்படத்தையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருக் கிறது. இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
உத்தராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த வீணா திவாரி தற்போது அசாமில் பணியாற்றி வருகிறார். அவரது தாத்தா, தந்தை ஆகியோர் ராணுவ வீரர்கள் ஆவர். 3-வது தலைமுறையாக மருத்துவரான வீணா திவாரியும் ராணுவத்தில் இணைந்து சேவை யாற்றி வருகிறார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த..
ஹதேவில் பணியாற்றும் இந்திய மருத்துவ குழுவினருக்கு உள்ளூர் மொழியான துர்கிஷ் மொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தகவல்களை தெரிவிக்க இஸ்தான்புல் நகரில் பேராசிரியராக பணியாற்றும் பர்கான், அவரது மனைவி மல்லிகா உள்ளனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்புப் படை வீரர்கள், மருத்துவ குழுவினர் துருக்கியில் முகாமிட்டு மனித நேயத்தை உயிர்ப்பித்து வருகின்றனர்.