நவீன கருவிகளுடன் சிக்கிய கடத்தல் குழு!!
ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்பப் பெண்ணை ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு குழுவினர் இன்று) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரியான வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படுகின்ற முஹமட் ஹனீபா அர்சத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளை அளக்கின்ற இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டன.
இச்சந்தேக நபர் கடந்த 13.01.2023 அன்று வீதியில் பயணம் செய்த பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றினால் மோதி தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சந்தேக நபர் அக்கரைப்பற்று நிந்தவூர் கல்முனை பெரிய நீலாவணை மருதமுனை சம்மாந்துறை பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கின்ற பிரதான வியாபாரி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து கைதான சந்தேக நபரின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடுகள் பொலிஸாரின் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் இன்று மதியம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களான சகோதரன் சகோதரியை கைது செய்துள்ளனர்.
இதன் போது ஒரு தொகுதி போதைப்பொருட்கள் 2 அதி நவீன ஸ்கேனர்கள் சிசிடிவி டிவீஆர் உபகரணம் பதிவு செய்யப்படாத ட்ரோன் பறக்கும் சாதனம் உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபரின் சகோதரியான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.