;
Athirady Tamil News

யாழ் மாநகர சபை முதல்வர் வர்த்தமானி விவகாரம்; மார்ச் 7 நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை!!

0

யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவுற்றுள்ள நிலையில் மார்ச் 7 ஆம் திகதி வழக்கு தொடர்பாக
இடைக்கால கட்டளையிடப்படவுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ் மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தொடுத்துள்ள மனு மீதான விசாரணை இன்று இரண்டாம் தடவையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்றம் மார்ச் 7ஆம் திகதி வழக்கு தொடர்பாக இடைக்கால கட்டளையிடவுள்ளது.

குறித்த வழக்கில் யாழ் மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் மனுதாரரான யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சார்பில் கு.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரும் ஆஜராகினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.