பிரேசிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா: மாற்று பாலினத்தவர்கள் பங்கேற்று ஆட்டம், பாட்டம் என ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் !!
பிரேசிலில் சல்வதோர் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரேசிலில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த 2 ஆண்டுகள் வருடாந்திர திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு தளர்வுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் சல்வதோர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூறினர். அவர்கள் ஆட்டம், பாட்டம், நடனம் ஆடி கொண்டாடினர். மேலும், விதவிதமான ஆடைகள் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
நடப்பாண்டு மாற்றுப்பாலினத்தவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அவர்கல் தங்கள் இணையருடன் கலந்து கொண்டாடினர். அவர்கள் வண்ண வண்ண உடைகள் அணிந்து பங்கேற்றனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் தற்போது இந்த திருவிழாவில் ஒன்றாக கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். சுமார் 400 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.