சுகாதார துறைக்கு எரிபொருள் வாங்க நிதி வழங்கும் ஜப்பான் !!
இலங்கைக்கு 5 பில்லியன் ஜப்பானிய யென் அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்த இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது.