டெல்லி பிபிசி அலுவலகத்தில் ரெய்டு- வருமான வரித்துறை அதிரடி !!
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.