அமெரிக்கா ,கனடாவை அடுத்து மற்றொரு நாட்டிலும் பறந்த மர்ம பலூன் !!
அமெரிக்கா, கனடாவை அடுத்து ருமேனியா வான் பரப்பிலும் சந்தேகத்திற்கு இடமான மர்ம பலூன் பறந்து சென்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ருமேனியாவின் தென்கிழக்கு பகுதியில் விமானப்படையின் கண்காணிப்பு அமைப்பில் மர்ம பலூன் ஒன்று தென்பட்டதாகவும் ஆனால் 10 நிமிடத்தில் அந்த பலூன் மாயமாய் மறந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பலூன் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்ததாகவும் அதனை இரண்டு ஜெட் விமானங்கள் விரட்டி சென்ற போது மாயமாய் மறந்து விட்டதாகவும் ருமேனியா அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் வான் பரப்பில் பறந்த மர்ம பலூன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதும் அவை சீனாவின் உளவு பலூன் என குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.