உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடல் !!
உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழுவினர், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (14) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணை பாதுகாப்பு செயலாளர் ஜெடிடியா ரோயல் குழுவில் அங்கம் வகிப்பதுடன், இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை தூதுக்குழுவினர் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவானது போயிங் சி 17 குளோபல் மாஸ்டர் 3 விசேட விமானத்தில் இலங்கையை வந்தடைந்தாகவும் இந்த பயணம் உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடல் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தூதுக்குழுவினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்போது, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிய பாதை அவர்களது வருகையின் போது போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது.