தைத்த ஆடைகளின் விலைகளை 20 சத வீதத்தால் அதிகரிக்க வேண்டிய நிலையாம்!!
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தைத்த (ரெடிமெற்) ஆடைகளின் விலையையும் 20 சத வீதத்தால் உயர்த்த வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும் இது முழு தொழிற்துறைக்கு பாரிய பிரச்சினை எனவும், இதனால் தொழில் முறை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் உணவு வகைகளின் விலைகளை 15 சத வீதம் முதல் 20 சத வீதம் வரை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”