பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு- ஒரு லிட்டர் ரூ.272-க்கு விற்பனை!!
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்த்தப்பட்டு ரூ.196.68-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அதே போல் பொது விற்பனை வரி 17 சதவீதமாக இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.