;
Athirady Tamil News

உலகளாவிய ரீதியில் மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட கனேடிய சிறுவன்!!

0

கனேடியச் சிறுவன் ஒருவன் தனது செயல்களால் இலட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளான்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Quesnel என்ற இடத்தில், தண்ணீர் கான் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்கள் Pelletier தம்பதியர். தம்பதியரின் மகனான தோமசுக்கு 1 வயது முடிந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது.

ஆனால், 15 மாதக் குழந்தையான தோமஸ் செய்யும் வேலைகளைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அம்மா, அப்பா செய்யும் வேலைகளைக் கவனித்துக்கொண்டேயிருந்த தோமஸ், தானும் பெற்றோருக்கு உதவத் தொடங்கியிருக்கிறான்.
ஆயிரம் கண்கள் வேண்டும்

அவனது உயரத்துக்கு இணையாக இருக்கும் தண்ணீர் கான்களைத் தூக்கிக்கொண்டு அவன் நடப்பதைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பானாம் தோமஸ்.

கடையை சுத்தம் செய்வது, கான்களை வாங்கி அடுக்குவது என, அவன் தங்களைவிட நன்றாக வேலை செய்வதாகத் தெரிவிக்கிறார்கள் நிறுவன ஊழியர்கள்.

தோமஸ் அழகாக வேலை செய்யும் காட்சிகள், உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாட்டு மக்களால் 33 மில்லியன் முறைகள் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.