ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறும்-வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. உறுதி!!
2026 சட்டசபை தேர்த லில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறும் என்று வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் மிஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. புதுவை ராஜ்பவன் தொகுதி துணைத்தலைவர் மாலதி வரவேற்புரையாற்றினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, ஓ.பி.சி. மாநில துணைத்தலைவர் சீனிவாசன், முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, நகர மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆனந்தகண்ணன், விமலா, ராஜ்பவன் தொகுதி துணைத்தலைவர் ஆனந்த பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி துணைத்தலைவர் முருகன் இரங்கல் தீர்மானத்தையும், பொதுச் செயலாளர் கதிரவன் வரவு தீர்மா னத்தையும் வாசித்தனர். தொகுதி தலைவர் நாகராஜன் தலைமை உரையாற்றினார். ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, 2024-ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தீவிரமாக களபணி யாற்றும் போது 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ராஜ்பவன் பா.ஜனதாவின் கோட்டையாக நிச்சயமாக மாறும் என்று உறுதியாக கூறினார். தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் புதுவை மாநிலத்துக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் மத்திய அரசுக்கும், புதுவை மாநில தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.