சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்ப்பு!!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.