நாகரீகமான அரசியலை எதிர்பார்க்கின்றோம்: ஜீவன் தொண்டமான்!!
மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன் எனவும் தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை ஐஸ்லபே தோட்டத்தில் இ.தொ.காவின் உப தலைவரும், ஹல்துமுல்ல பிரதேச சபையின் தவிசாளருமான அசோக்குமாரின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நேற்று (17) குறித்த தோட்டத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பங்கேற்றேன். இதனை சிலர் விமர்சிக்கலாம். ஆனால் மக்களுக்காகவே என்பது அரசியல் பயணம் என்பதால் மக்கள் பக்கம் நின்றே முடிவுகளை எடுப்பேன் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.