அமெரிக்காவில் எப்பிஐ கம்ப்யூட்டர்கள் முடக்கம்!!
அமெரிக்காவின் முக்கிய விசாரணை அமைப்பான எப்பிஐ அலுவலக கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விசாரணை அமைப்பு எப்பிஐ. இந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் நேற்று ஹேக் செய்யப்பட்டன.
இதை யார் செய்தார் என்பதை எப்பிஐ விசாரித்து வருகிறது. இது ஒரு சைபர் தாக்குதல் என்று எப்பிஐ தெரிவித்து உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டுள்ளன.