சிவராத்திரியன்று கோண்டாவிலில் மாட்டுக்கன்றின் தலையை வெட்டி வீசிய விஷமிகள்!
சிவராத்திரி தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மாட்டு கன்று ஒன்றினை வெட்டி , அதன் தலையையும் , இதர மாமிச கழிவுகளையும் வீதியில் வீசி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் , முத்தட்டுமட வீதியில் இன்றைய தினம் காலை மாட்டு கன்றின் தலையையும் அதனுடன் இதர மாமிச கழிவுகளும் வீசப்பட்டு காணப்பட்டமையை அடுத்து , அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இந்துக்களின் புனித விரதங்களில் ஒன்றான சிவராத்திரி விரத நாள் அன்று மாட்டு கன்றினை வெட்டி அதன் தலையை வீசி சென்று இருந்தமை அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தி இருந்தது.
விஷமிகளின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசாரிடம் கோரியுள்ளனர்.