தைவான் தீவில் சீனாவின் ஆராய்ச்சி பலூன்!!
அமெரிக்கா வான்எல்லைக்குள் நுழைந்தது சீனாவின் உளவு பலூன் என அந்நாடு குற்றம்சாட்டியதோடு, அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனாவின் வானிலை ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆகாய கப்பல் தைவானில் தரையிறங்கியதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சககம் தெரிவித்துள்ளது.
வடக்கு நகரமான தையுவானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட உபகரணங்களை கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளது. சீன வானிலை நிர்வாகத்துக்கு உபகரணங்கள் வழங்கிய பல நிறுவனங்களில் தைவானும் இடம்பெற்றுள்ளது. வானிலையை கண்காணிப்பதற்காக தினமும் ஏவப்பட்ட பலூன்களில் ஒன்றாக இது இருக்கலாம் என கருதப்படுகின்றது.