பெண்களை நிர்வாண வீடியோ கால் பேச வைத்து 50 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு!!
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் வாட்ஸ் அப் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் கும்பல் சில மோசடி செயல்களில் ஈடுபட்டு பணத்தை பறிக்கின்றனர். லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர், தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்வது அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அந்த வீடியோ அழைப்பில் மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவது, அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக தோன்றுவது என்பது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கு பெண் ஒருவரிடமிருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேச தொடங்கிய அந்த பெண் அவருக்கு காதல் வலை விரித்தார். இதில் அவர் அந்தப் பெண் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் அளித்தார்.
சில நிமிடங்களில் வாட்ஸ் அப் வீடியோ கால் வந்துள்ளது. அவரிடம் பேசிய இளம்பெண் ஆடை இல்லாமல் தனது உடல் அந்தரங்க பகுதிகளை காண்பித்துள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரையும் அதே போன்று காண்பிக்கும்படி இளம்பெண் கூறியுள்ளார். பெண் மீது இருந்த மோகத்தால் அவரும் ஆடையின்றி நிர்வாணமாக நின்றார். இதனை அந்த இளம்பெண் வீடியோ பதிவு செய்துள்ளார். சில நிமிடங்களில் மோசடி கும்பல் வாய்ஸ் மெசேஜுடன் போன் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை இல்லாமல் வீடியோ கால் செய்ததாக கூறி போலீசில் பாதிக்கப்பட்ட பெண்னை வைத்து புகார் அளிப்போம் என்றும், உங்கள் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.
இதனால் பயந்து போன அந்த ஊழியர் மோசடி கும்பல் கேட்டபடி பல்வேறு வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.75 லட்சம் வரை கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு தொல்லை செய்வார்கள் என்ற அச்சத்தில் தான் ஏமாந்தது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பலில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். காமாரெட்டியை சேர்ந்த வாலிபர் ரூ.60 ஆயிரம் அனுப்பியதாகவும் மேலும் ஒருவர் ரூ.1 லட்சம் அனுப்பியதும் தெரிய வந்தது.
பலர் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் புகார் அளிக்க முன்வராமல் இருந்த நிலையில் தற்போது விஷயம் வெளியே வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்து வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இளைஞர்கள் அல்லது யாரேனும் இதுபோன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பணத்திற்காக யாரேனும் பெண்களின் போட்டோக்களுடன் அரட்டை அடித்தால், அவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். புகார்களைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கும்பல் ராஜஸ்தானில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.