டெல்லியில் உள்ள ஓவைசி வீடு மீது கல்வீச்சு!!
அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி. ஐதராபாத்தை சேர்ந்த இவருக்கு டெல்லியிலும் வீடு இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அசோகா சாலையில் உள்ள ஓவைசியின் வீடு மீது மர்ம மனிதர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஓவைசி பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
எனது வீடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. எனது வீட்டு உதவியாளர் இதை தெரிவித்தார். இதை தொடர்ந்து ஜெய்பூரில் இருந்து நான் டெல்லி திரும்பினேன். எனது வீடு மீண்டும் தாக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்து இது மாதிரி நடப்பது 4-வது சம்பவமாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.