;
Athirady Tamil News

விசா பிரதானியின் மடிக்கணினி திருட்டு !!

0

இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தும்முல்ல பிலிப் குணவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இந்திய விசா நிலையத்தின் தலைமைப் பிரதிநிதி, தனது கடமைகளுக்காக பயன்படுத்திய மடிக்கணினி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக விசா வழங்குவதுடன் சர்வதேச மட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்திய விசா நிலையமான ஐவிஎஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தில் இருந்து மடிக்கணினி மற்றும் இரண்டு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்களை (டிவிஆர்) இனந்தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி அதிகாலை இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிருலப்பனையிலிருந்து முச்சக்கரவண்டியில் வந்த மூவர் வீசா நிலையத்தின் நுழைவாயிலை உடைத்து நான்கு மாடி கட்டடத்தின் முன்பக்க கதவையும் உடைத்து இரண்டாவது மாடிக்கு திருடச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாடியில் உள்ள தலைமைப் பிரதிநிதி அலுவலகத்தில் நான்கு மடிக்கணினிகளும் 30 இலட்சம் ரூபாய் பணமும் ஐபோனும் இருந்த போதும் அவை எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.