;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் படைகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு…!

0

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.

கிழக்கில் அமைந்துள்ள தமது அண்டை நாடுகளுடனான கடவையை தலிபான்கள் மூடியதையடுத்தே இந்த துப்பாக்கிச் சண்டை நேற்றைய தினம் (20.02.2023) இடம்பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரிசலடைந்தன.

தமது மண்ணில் தாக்குதல்களை நடத்திய ஆயுதக் குழுக்களுக்கு இஸ்லாமாபாத் அடைக்கலம் கொடுப்பதாக அதன் ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தி வருகிறது.

ஆவணங்கள் இல்லாமல் மருத்துவ நோயாளிகளின் உதவியாளர்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் புதிய விதிகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் விதித்ததையடுத்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் எல்லையை மூடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளைத் தெளிவுபடுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் இஸ்லாமாபாத் அதற்குப் பதிலளிக்கவில்லை என்று ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு ஆப்கானிஸ்தான் தரப்பாலே ஆரம்பிக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இருதரப்பு சண்டையின்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டனவா… என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.