அரச நிதிக்குழுவிற்கு ஹர்ஷ உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

அரசாங்கத்தின் நிதிக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட பத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், பாட்டளி சம்பிக்க ரணவக்க, சந்திம வீரக்கொடி, நாலக கொடஹேவா, ஹர்ஷ டி சில்வா, எம்.ஏ.சுமந்திரன், ஹேஷா விதானகே, மயந்த திஸாநாயக்க மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டன. கடந்த முறை இந்தக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இருந்தார்.