தேசிய பாதுகாப்பு சபை குறித்து புதிய தீர்மானம்!!

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு சபையை சட்டப்பூர்வமாக்குவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.
மேலும், தேசிய பாதுகாப்பு சபையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு, பொருளாதார மற்றும் இராணுவ கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கான முதன்மை நிர்வாக நிறுவனமாகும்.
தேசிய பாதுகாப்பு சபையை அரசியலமைப்பு அடிப்படையிலும் தெளிவான அமைப்பிலும் நிறுவ வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் மேலும் பரிந்துரைத்துள்ளது.