நீதிபதிகளின் சம்பளத்தில் வரி விதிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.