உக்ரைன் – ரஷ்ய போர் : தனது நிலைப்பாட்டைக் கூறிய சீனா!
உக்ரைன் – ரஷ்ய யுத்தம் தொடர்பில் சீனா தனது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளது.
“பதட்டங்களை தவிர்க்க பொறுப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்பட சீனா விரும்புகிறது.”
இவ்வாறு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங் கூறியுள்ளார்.
சீனாவின் மூத்த அரசதந்திரி வாங் யி ஐரோப்பிய நாடுகளின் பயணத்தின் ஓர் அங்கமாக இன்று மாஸ்கோ செல்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் திரு. வாங் சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் இருப்பதாக தெரிகிறது.
ரஷ்யாவுடன் எல்லையற்ற உறவு இருப்பதாகச் சீனா சென்ற ஆண்டு கூறியிருந்தது, உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்கு பெய்ச்சிங் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், தற்போது இவ்வாறான கருத்து வெளிப்பட்டுள்ளது.
சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது, இதனை சீனா மறுத்திருந்தது.
மாஸ்கோவிடமிருந்து விலகியிருப்பது போலவும், அமைதியை விரும்பும் நாடு என்றும் தன்னைக் காட்டிக்கொள்ள சீனா விரும்புவதாக கூறப்படுகின்றது.