ஆக்ராவில் களைகட்டும் “தாஜ் மஹோத்சவ்”- 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் அம்மாநில உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் நேற்று தாஜ் மஹோத்சவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மஹோத்சவை தொடங்கி வைத்த உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் பின்னர் பேசியதாவது:- ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 300 கைவினைஞர்கள் இந்த ஆண்டு ‘விஷ்வ பந்துத்வா’ என்ற கருப்பொருளில் பங்கேற்கின்றனர்.
இந்த மஹோத்சவ் கலை, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளின் கலவையாகும். இது உள்ளூரில் வசிப்பவர்களை மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. இதுபோன்ற நிகழ்சியை ஏற்பாடு செய்ததற்காக ஆக்ரா நிர்வாகம், உ.பி. சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.