இந்திய வம்சாவளி இன்ஜீனியருக்கு நேஷனல் ஜியோகிராபிக் புகைப்பட விருது!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர் கார்த்திக் சுப்பிரமணியத்தின் புகைப்படத்துக்கு நேஷனல் ஜியோகிராபிக்கின் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. 5,000 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் சுப்பிரமணியத்தின் “டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்’’ புகைப்படம் இந்த விருதை தட்டி சென்றது.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த வெள்ளை தலை கழுகுகளை படம் பிடிப்பதற்காக அந்த கழுகுகள் சாலமன் வகை மீன்களை பிடிக்க ஒன்று கூடும் அலாஸ்காவின் ஹெய்ன்ஸ் பகுதியில் உள்ள சில்காட் வெள்ளை தலை கழுகு சரணாலயத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நவம்பர் மாதத்தில் காத்திருந்து படம் பிடித்தேன்,’’ என தெரிவித்தார். இந்த புகைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் நேஷனல் ஜியோகிராபிக் புத்தக அட்டையில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.