அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக் குழு விவகாரம் : ஹர்ஷாவின் பெயர் ஏன் சபைக்கு அறிவிக்கவில்லை – பிரதி சபாநாயகரிடம் எதிர்க்கட்சி கேள்வி!!
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவராக நியமிக்குமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு ஏன் சபைக்கு அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பிரதி சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்கள்.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தயார் ஆனால் எதிர்க்கட்சியின் தரப்பில் இருந்து இருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் தெரிவு குழு பேச்சுவார்தாக ஊடாக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்படுவோம் என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (22) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போது விசேட ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து எதிர்தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.
சபையில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அரசாங்க நிதி தொடர்பில் நிதி விவகாரங்கள் தீர்மானிக்கப்படுகிறது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்படுகிறது.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு என குறிப்பிடுகிறது ஆனால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்குவதை நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறது.இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் போலியாக உள்ளது எனறார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவிக்கு எனது பெயரை பரிந்துரை செய்ததாகவும் அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவி நியமனம் தொடர்பான அறிவிப்பு இதுவரை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை அரசியல் இல்லாமல் அரசாங்க நிதி தொடர்பான குழு தலைவராக சேவையாற்றினேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் கட்சிகளின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என தெரிவு குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தெரிவு குழுக்களை நியமிக்கும் நோக்கம் எமக்கு கிடையாதுஇஅரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி தரப்பில் இருந்து இருவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளத என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழு நியமன குழு கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துக் கொண்டார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசாங்க நிதி தொடர்பான குழுவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என்பதால் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை நான் பரிந்துரை செய்தேன் அதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.ஆனால் அந்த தீர்மானம் பாராளுமன்றத்திற்கு ஏன் இதுவரை அறிவிக்கவில்லை என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் விமர் வீரவன்ச பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சியில் இருந்து இருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் குறிப்பிட்டார்.யார் அந்த பிறிதொருவர் என்பதை சபைக்கு அறிவியுங்கள் என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷமன் கிரியெல்ல எதிர்க்கட்சிகளின் சார்பில் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை நான் பரிந்துரை செய்தேன்எதிர்க்கட்சிகளின் சார்பில் வேறு பரிந்துரைகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி முறையான விடங்களை முறையற்ற வகையில் செயற்படுத்தியதால் நாடு இன்று வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்;டளையின் பிரகாரம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் ஆகவே முறையாக செயற்படுங்கள் என வலியுறுத்தினார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் நிமல் லன்ஷா அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் யார் என்பதை சபாபீடத்தில் தீர்மானிக்க முடியாதுஇதெரிவு குழு ஊடாகவே நியமனம் இடம்பெற வேண்டும் ஆகவே பரிந்துரைக்கப்ப்பட்டுள்ள பெயர் விபரத்தை சபைக்கு அறிவிக்க வேண்டாம் என சபையில் வலியுறுத்தினார்
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா பாராளுமன்ற நிலையியற்ற கட்டளையின் 126 ஆவது பிரிவின் பிரகாரம் அரசாங்க தெரிவு குழுவின் தலைவர் தெரிவு குழு ஊடாகவே தெரிவு செய்யப்பட வேண்டும் கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார்.