;
Athirady Tamil News

விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்றால் தான் மேலதிக காணிகளை கோர முடியும்!!

0

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ் மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்

மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில் ராணுவத்தின் இடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்காத நிலைமை காணப்படுகிறது.

விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள தமது காணிகளை கையேற்று , உரிய பாவணைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்

விடுவிக்கப்பட்ட காணிகளில் ராணுவத்தினர் வெளியேறிய பின்னர் அந்த கட்டிடங்களை அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள்.

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கை ஏற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

எனவே விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.