உலக வல்லரசின் ஆட்சி அதிகாரம் இந்திய வம்சாவளி கையிலா – அமெரிக்க அரசியல் பரப்பில் பரபரப்பு!
அமெரிக்காவின் முக்கிய தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் களமிறங்குவதாக வெளியான அறிவிப்பையடுத்து, அமெரிக்க அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று தற்போது அதிபராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அடுத்த அதிபர் தேர்தலுக்கான நகர்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
இவ்வாறான நிலையில், 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அதே கட்சியிலிருந்து இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமியும் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் ட்ரம்ப்பும் கவனமாக இருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடமும் பேசி ட்ரம்ப் தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார். இவ்வாறான நிலையிலேயேயே அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே ட்ரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்கவுள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொந்தக் கட்சிக்குள்ளிருந்தே ட்ரம்புக்கு எதிராக பலரும் உருவாகி வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.