நாட்டில் அதிக விமான நிலையங்கள், சிறந்த போக்குவரத்து இணைப்பு மக்களை நெருக்கமாக்கி வருகிறது- பிரதமர் மோடி!!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை தற்போது மீட்புப் பாதையில் செல்வதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன், சராசரி தினசரி உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3,98,579 ஆக இருந்தது. தொடர்ந்து, கடந்த திங்களன்று சிந்தியா வெளியிட்ட ட்வீட்டில்,”உள்நாட்டு விமானப் பயணிகளின் வருகை கொரோனாவுக்குப் பிறகு புதிய அளவை தொட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டு விமானங்கள் மூலம் 4,44,845 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இது இன்னொரு மைல்கல்! இந்திய சிவில் தொடர்கிறது!,” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து கொரோனாவுக்கு பிந்தைய நிலையில் 4.45 லட்சத்தைத் தொட்டது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்ட ட்வீட்டைப் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
அதனுடன் பிரதமர் மோடி, “விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சிறந்த விமான சேவை இணைப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை மக்களை நெருக்கமாக்கிவருகிறது. நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்தை அதிகரிக்கிறது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.