எய்ட்ஸ் நோயை குணமாக்கும் புதிய மருத்துவ முறை: மருத்துவர்களுக்கு கைகொடுக்கும் ஸ்டெம் செல் தரப்பி!!
எச்.ஐ.வி தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை நுட்பம் மருத்துவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. பிரான்சில் தொடர் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு பிறகு எய்ட்ஸ் நோயாளி ஒருவர் முற்றிலும் குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலகிலேயே குணப்படுத்த முடியாத நோய்களில் முக்கியமாதனதாக இருந்தது எய்ட்ஸ் எனப்படும் எச்.ஐ.வி தொற்று நோயாகும். பாலியல் உறவு மூலமாக பரவும் இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த பல சதாப்தங்களாக மருந்துகள் இல்லாத நிலையில் ஸ்டெம் செல் தரப்பி எனப்படும் எலும்பு மஞ்சை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை இதற்கு பலனளிக்க தொடங்கியிருக்கிறது.
எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை எலும்பு மஞ்சை ஸ்டெம் செல்கள் மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக குணப்படுத்தி இருப்பதாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள PASTEUR நிறுவனம் அறிவித்துள்ளது. எச்.ஐ.வி நோய் தொற்றை எதிர்க்கும் ஒரு அரிய மரபணு மாற்றத்தை கொண்ட நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட எலும்பு மஞ்சை அறுவை சிகிச்சை மூலமாக பாதிக்கப்பட்ட நபருக்கு பொறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 44 மாதங்களில் நோயாளியின் உடலில் படிப்படியான மாற்றங்கள் உருவான நிலையில் அவரிடம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில் எச்.ஐ.வி தொற்றுக்கான அறிகுறிகள் முற்றிலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக PASTEUR நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்கனவே எலும்பு மஞ்சை ஸ்டெம் செல் சிகிச்சையால் 2007 பெர்லினிலும், 2016-ல் லண்டனிலும் 2 பேர் எச்.ஐ.வி. நோயில் இருந்து குணமடைந்து இருக்கும் நிலையில் 3-வதாக பாரிஸில் எய்ட்ஸ் நோயாளி ஒருவர் மீண்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றன. உலகளவில் 3 கோடிக்கு மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு நிரந்தர மருந்து தீர்வாக எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை நுட்பம் தற்போது உருவெடுத்துள்ளது.