;
Athirady Tamil News

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்?

0

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள் என்பது தனக்கு தெரியாதென வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் வில் வீரசன்ச ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டின் வருகையை தொடர்ந்து பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்தார்கள்.

இவர்கள் ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியுமா ?

அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும் ஆகவே அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிவாரா,அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.