வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, அராலியின் புலம்பெயர் உறவுகளால் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அராலியில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதியை ஒருங்கிணைத்து, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா, இந்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்தியசாலைக்கு வழங்கினார்.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா, குறித்த உதவித்திட்டத்தை வழங்கி வைத்த நன்கொடையாளர்கள், வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினர், வைத்தியசாலை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.