தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை: ஜனாதிபதி!! உயர் நீதிமன்றின் உத்தரவு என்ன??
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை. எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம்.
தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவுக்குள் ஒற்றுமை இல்லை. இருவர் இணைந்து தீர்மானத்தை எடுத்துவிட்டு. அதற்கான அனுமதியை ஏனைய உறுப்பினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கு எதிரான மனு – உயர் நீதிமன்றின் உத்தரவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவரினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
எஸ். துரை ராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் திகதி மார்ச் ஒன்பதாம் திகதியென அறிவித்து அதன் பின்னர் பல குழப்ப சூழ்நிலையில் அதுக்குரிய “தேர்தலை ஒத்திவைக்குமாறு” கோரிய வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் மார்ச் பதினோராம் திகதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.