;
Athirady Tamil News

சுகாதார செலவுகளை குறைக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!!

0

சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வரும் நாட்களில் மருத்துவமனைகள் தவிர மற்ற சுகாதார அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு, சுத்திகரிப்புச் செலவை 10 சதவீதம் குறைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை ஊதியம் மாதத்திற்கு 5 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல், தேவையற்ற மின் விளக்குகளை அணைத்தல் மற்றும் தண்ணீர், எரிபொருள், தொலைபேசி மற்றும் எழுதுபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் சுகாதார செயலாளர் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும், தேவைப்பட்டால் சுகாதாரச் செயலாளரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.