பணம் அச்சிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
திறைசேரியின் கோரிக்கைகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி பணம் அச்சிடுவதை இடைநிறுத்தினால் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திறைசேரியின் நிதித் தேவைகளுக்கு ஏற்ப தேவையான தொகையை மத்திய வங்கி அச்சடித்து வழங்குவதே இதுவரை வழமையான நடைமுறையாக இருந்தது.
இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டால், திறைசேரி மாற்று நிதி ஆதாரங்களைத் தேட வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதாரம் தாங்கும் அளவிற்கு பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்கும் புதிய சட்டம் தொடர்பில் அமைச்சரவை கடந்த வாரம் விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம், அரசாங்கம் நிதி அமைச்சிடம் எத்தனை கோரிக்கைகளை முன்வைத்தாலும் பணத்தை அச்சிடாத ஒரே அதிகாரம் மத்திய வங்கிக்கு கிடைக்கும்.
இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.