;
Athirady Tamil News

பொதுஜன பெரமுனவின் திடீர் தீர்மானம் !!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக அனுராதபுரத்தில் இன்று நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது பொதுத் தேர்தல் பேரணியை இன்று அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது. எனினும் இந்த பேரணி மார்ச் நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

“சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், அவர்களால் பொதுக்கூட்டம் நடத்த முடியாது என்றும் கூறுகின்றனர்.

இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் அனுராதபுரத்தில் பாரிய மக்கள் பேரணியை நடத்துவோம் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.