வண்ண மலர்களாக மாறும் குப்பைகள், சிகரெட்டுகள்: கைவினைக் கலைஞரின் அசாத்திய திறமை..!!!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வில்லியம் அமோர் சிறுவயது முதலே கலைப்படைப்புகளை உருவாக்குவதில் அதீத ஆர்வம் கொண்டவர். பாரீஸில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், சிகரெட் துண்டுகள் தெருக்களில் வீசப்படுவதை கொண்ட அவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சேகரித்து வண்ண மிகு மலர்களாக வடிவமைத்து வருகிறார்.
அமோருக்கு சிறுவயது முதலே பூக்கள் மீது ஆர்வமிருந்தது. இதுவே அவரது வண்ண மிகு கலைப்படைப்புகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறது. நிஜ மலர்களை பார்த்து நகர மக்கள் அதன் அருகே செல்வது போல தத்துரூபமாக செயற்கை மலர்களை வடிவமைத்து வருகிறார். தனது கடின உழைப்பு மூலம் உருவாக்கப்படும் இந்த மலர்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி வருவதாக வில்லியம் ஆமோன் தெரிவிக்கிறார்.