அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு!!
அரசின் தற்போதைய புதிய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று(25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை கொள்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.