உலக அளவிலான தேர்வு திறமை தமிழ் வழி மாணவர்களிடம் குறைந்தது- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
அமெரிக்காவில் உள்ள ஸ்டான் போர்டு நிறுவனம் உலக அளவிலான தேர்ச்சி திறமை இந்திய மாணவர்களிடம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு நடத்தி இருக்கிறது. நாடு முழுவதும் 10 ஆயிரம் பள்ளிகளில் 20 மொழிகளில் படித்து வரும் 86 ஆயிரம் 3-ம் வகுப்பு மாணவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். சிறு வயதில் மொழி வழியிலான கல்வியே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அடிப்படையிலேயே இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். உலக அளவிலான தேர்ச்சி திறமைக்கென்று ஒரு அளவீட்டை அடிப்படையாக வைத்து மாணவர்களின் திறமையை சோதித்து இருக்கிறார்கள். இதில் பஞ்சாப் மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளார்கள். அவர்களில் 51 சதவீதம் பேர் உலக அளவிலான குறியீட்டை தாண்டி விட்டார்கள்.
6 சதவீதம் பேர் மட்டுமே கீழ் நிலையில் உள்ளார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே அந்த தகுதியை பெற்றுள்ளார்கள். 48 சதவீதம் பேர் கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள். அதே நேரம் வங்காள மொழி, மிசோ மொழி, ஒடியா மொழி, ஆங்கில மொழி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய 6 மொழிகளில் படிப்பவர்கள் 30 சதவீதம் பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 42 சதவீதம் பேர் மிகவும் கீழ் நிலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே உலக வங்கியும் இந்தியாவில் 50 சதவீதம் ஆரம்ப நிலை மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளாக இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.