;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ராக்ஸி ஜசென்கோ. இவரது மகள் பிக்ஸி கர்டிஸிக்கு தற்போது 11 வயது தான் ஆகிறது. ஆனால் மாதம் 2 லட்சம் டொலர் வருமானம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார். 2 லட்சம் டொலர்கள் என்பது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 5 கோடியாகும். ஒன்லைனில் விற்பனை செய்யும் தொழில் ஒரு மாதத்திற்கு 5 கோடி ரூபாய் வருமானம் – திடீரென விலகுவதாக அறிவித்த 11 வயது சிறுமி: இது தான் காரணம் | Job Vacancies 1 Crore Salary Luky Appointment இந்த நிலையில் தான் செய்யும் தொழிலை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த பிக்ஸி கர்டிஸி தனது பாடசாலை படிப்பை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார். பிக்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொம்மைகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். சில மாதங்களிலே அவரது பிராண்ட் நல்ல வரவேற்பு பெறத் துவங்கியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள குழந்தைகள் இவரது பொம்மைகளை அதிக அளவில் வாங்கியுள்ளார்கள். இதனால் அவுஸ்திரேலியாவில் இவரது பொம்மைகள் கூடுமானவரை விற்பனை ஆனது. தொழிலிருந்து ஓய்வு ஒரு மாதத்திற்கு 5 கோடி ரூபாய் வருமானம் – திடீரென விலகுவதாக அறிவித்த 11 வயது சிறுமி: இது தான் காரணம் | Job Vacancies 1 Crore Salary Luky Appointment பிக்ஸி தனது படிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி தனது தொழிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார். இதனைப் பற்றிப் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். பெரியளவில் வருமானம் ஈட்டியுள்ள பிக்ஸி கர்டிஸின் தொழில் திறமை தனக்குப் பெருமை அளிப்பதாக அவரது தாயார் ராக்ஸி தெரிவித்துள்ளார்.!!

0

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ராக்ஸி ஜசென்கோ. இவரது மகள் பிக்ஸி கர்டிஸிக்கு தற்போது 11 வயது தான் ஆகிறது.

ஆனால் மாதம் 2 லட்சம் டொலர் வருமானம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார். 2 லட்சம் டொலர்கள் என்பது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 5 கோடியாகும்.

இந்த நிலையில் தான் செய்யும் தொழிலை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த பிக்ஸி கர்டிஸி தனது பாடசாலை படிப்பை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

பிக்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொம்மைகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சில மாதங்களிலே அவரது பிராண்ட் நல்ல வரவேற்பு பெறத் துவங்கியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள குழந்தைகள் இவரது பொம்மைகளை அதிக அளவில் வாங்கியுள்ளார்கள். இதனால் அவுஸ்திரேலியாவில் இவரது பொம்மைகள் கூடுமானவரை விற்பனை ஆனது.

பிக்ஸி தனது படிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி தனது தொழிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார். இதனைப் பற்றிப் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பெரியளவில் வருமானம் ஈட்டியுள்ள பிக்ஸி கர்டிஸின் தொழில் திறமை தனக்குப் பெருமை அளிப்பதாக அவரது தாயார் ராக்ஸி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.