இனி வேலையில்லை -ரோபோக்களையே பணிநீக்கியது கூகிள் !!
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேலே சென்று ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளது கூகிள் நிறுவனம்.
ஏற்கனவே தனது பணியாளர்களில் பலரை வேலையை விட்டு தூக்கிய கூகிள் நிறுவனம் இன்னும் ஒருபடி மேலே சென்று ரோபோக்களையே வேலையை விட்டு தூக்கியுள்ளது.
கூகிள் நிறுவனத்தில் கதவை திறந்து விட, தளத்தை சுத்தம் செய்ய, குப்பை அள்ள, கன்ரீனில் பணிவிடைகள் செய்ய என பல பயன்பாடுகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் அலுவலக செலவுகளை குறைக்கும் வண்ணம் உணவு மேசையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அகற்றவும், கதவுகளை திறக்கவும் பயிற்சி பெற்றிருந்த ரோபோக்கள் அந்த பணியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்க நடவடிக்கை மனிதர்களில் தொடங்கி ரோபோக்கள் வரை நீண்டிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.