35 ஹைட்ரஜன் ரயில்களுக்கு டெண்டர் விட ரயில்வே திட்டம்!!
ரயில்வே அமைச்சகம் ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
மலைப்பிரதேசங்கள் மற்றும் பாரம்பரிய ரயில்கள் ஓடும் இடத்தில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக சீமன்ஸ், கும்மின்ஸ், ஹிடாச்சி, பெல் மற்றும் மேதா சர்வோ ஆகிய நிறுவனங்களுடன் ரயில்வே அமைச்சகம் கடந்தவாரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கூட்டம் பயன ளித்ததாகவும், இத்திட்டத்தை விரைவு படுத்த தங்கள் கருத்தை தெரிவித்துள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை பெற்றபின், டெண்டர் வெளியிடுவோம் என ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது, டீசல் மற்றும் எலக்ட்ரிக் ரயில்களில் ஹைட் ரஜன் எரிபொருள் பேட்டரிகளை பொருத்தி இயக்கும் பரிசோதனையில் மேதா சர்வோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுதான் ஹைட்ரஜன் ரயிலின் முதல் மாதிரியாக இருக்கும்.
ஜிந்த்-சோனிபட் வழித்தடம்
இந்த ரயில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்தாண்டு இறுதியில் இயக்க வாய்ப்புள்ளது. ஒரு ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க சுமார் ரூ.80 கோடியும், தரை கட்டமைப்புகளுக்கு ஒரு வழித்தடத்துக்கு ரூ.70 கோடியும் செலவாகும் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.