டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம்!!
மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார்.
இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர் இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு பாஜக ஆட்சியில் மத்திய அரசின் துறைகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.
இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இத்தகைய அடக்குமுறைகள் நமது தேசத்தின் அடித்தளத்தையே குலைத்துவிடும். அதை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.