யாழில் கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு! விசாரணை ஆரம்பம்!!
யாழில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு கொரோனா இடர் நிலை ஏற்பட்டபோது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை பராமரிப்பதற்காக யாழில் மருதங்கேணி, நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இடைத் தங்கல் முகாங்கள் அமைக்கப்பட்டது.
குறித்த முகங்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் குளிர்சாதனப்பெட்டிகள் ,சலவை இயந்திரங்கள், மின்விசிறிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மற்றும் கொட்டகை அமைப்பதற்கான பிளாஸ்டிக் தகரங்கள் எனப் பல்வேறுபட்ட பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த இடைத்தங்கள் முகங்கள் அகற்றப்படும் போது அதிலிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பொருட்கள் பாதிவேட்டில் பதிவின்றிப் பல பொருட்கள் மாயமானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
குறிப்பாக கொரோனா இடைத்தங்கல் முகங்களை மேற்பார்வை செய்தவர்கள் அரச வாகனங்களில் அங்கு பாவித்த பொருட்களை கொண்டு சென்றமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா இடை தங்கல் முகாமில் இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலமாக கடிதங்களை அனுப்பினர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐவர் கொண்ட குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.