ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு !!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் துவங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வந்தனர். இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காலை 7 மணி முதல் 5 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் இருந்த நிலையில் மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 2021 சட்டசபை பொதுத்தேர்தலை விட தற்போது வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் 66.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இடைத்தேர்தலில் மொத்த வாக்கு சதவீதம் 70.58 ஆக பதிவாகி இருக்கிறது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன.