;
Athirady Tamil News

ஜனாதிபதிக்கு எதிராக போராட்ட வழக்கு ஒத்திவைப்பு!!

0

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ம் திகதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜனவரி 15 ஆம் திகதி தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் , பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.

மேலும் சில சந்தேக நபர்களை வழக்கில் இணைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அதனை அடுத்து, வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைத்தது.

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும் – வேலன் சுவாமிகள்!!

யாழில் பதற்றம்: எம்.பி உட்பட எழுவர் கைது!! (வீடியோ, படங்கள்)

சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.